. "தமிழ் மன்றம்" .: தமிழ் மருத்துவ இலக்கிய ஆவணத்துறை & ஆய்வுத்துறை நிறுவுதல்#comments

9 மறுமொழிகள்:

willswords m சொல்வது...

முகம் + சதுரன்; முகஞ் + சதுரன்; முகம் + சதரோ; முகஞ்+ சதாரோ (முகம் சதுரமானவன் - முகம் + சதுரன்) கருப்பன்; கரப்ப; உறரப்பா. இவற்றுள் முகம் என்பதும் தமிழ் சொல்; சதுரம் என்பதும் தமிழ் சொல்; அந்தப்படிக்கு சதுரன் (சதுரமானவன்) என்பதும் தமிழ் சொல். அவ்வாறே கருப்பன் என்பதும் தமிழ் சொல்தான்; இதில் அய்யமேதும் எவருக்கும் இருக்க முடியாது. தாய் தமிழானது ஐந்து மொழிகளாகப் பிரிவதற்கு முன்பாகவே முகம் என்பதும் சதுரம் என்பதும் மற்றும் கருப்பன் என்பதும் தமிழ் மொழியின் புழக்கத்தில் இருந்ததாகையால் முகஞ்சதாரோ, உறரப்பா நாகரிகங்கள் தமிழர் நாகரிகங்களே அன்றி, திராவிட நாகரிகம் அல்ல. அவ்வாறே நாகரிகம் என்கின்ற சொல்லானது நாகர் என்கின்ற மக்கட் பகுதியினருடைய தாகையால் மேலும் நாகரிகம் என்பதானது தமிழ் சொல்லாகவும இருக்கின்றதாகையால் தமிழர்கள்தாம் நாகர்களாகவும் இருந்திருக்கின்றனர் அல்லது நாகர்கள்தாம் தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கின்றனர். நாகர் + அகம் என்பதானது நாகரிகம் என்று ஆகியிருக்கின்றது.

Web site names /Web site addresses :
1)Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in
2)Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3)Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in
4)Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5)Willswords Stories Garden ……. ..
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m சொல்வது...

உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர் உயிரெழுத்து
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! அவ்விதமே...
நிகழ உறவு, நம்பிள்ளைக்கு முதல்எழுத்தாய் நிலைப்பதும்,
புகழப் படுவதும், நின்பெயரே என்று புன்னகைத்து நாணும்
அன்னைப்போல், செம்மொழியால் யார்கவிஞர் ஆனாலும்,
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? விண்வவருடும் தாய்தமிழே!

பின்னிரவில் கண்விழித்துப் பேணிச் சுறுசுறுப்பை (மணி)
பன்னிரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்
பெண்ணேபோல் விண்ணில், பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்?
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்!

அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க,
விழியேன் என்றே விடியல் குளிராய்,
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய்,
விழிவழி பேசு விழிப்பேன்!

உலாவும் உலகும் உருளும் கதிரோன்,
நிலாவும் உராயும் நெழிமுகில் வானும்,
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை,
பலாமாவும் பாடும் தமிழே!

மலரும் கொடியும் மணமும் முயங்க,
நிலவும் ஒளிர நிலமும் குளிர,
களத்துள் முனகிடும் காதலர் அன்ன,
குலவும் குயில்கள் குரலும் தமிழே!

சிரிக்கும் இயற்கைத் திறக்கும் மொழியும்,
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவைச்
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை,
விரிக்கும் அரியும்... வியக்கும்!

கமழும் மணத்தை கனியும் வனங்கள்,
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல்,
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும்,
தமிழ்தான் இளமையெனத் தாவும்!

எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே
அடுக்கும் இசையும் அதனால் அசைந்து
கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும்
துடுக்கும் தமிழுக்கே சொந்தம்!

கமழும் மணத்தைக் கனியும் வனங்கள்
உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள்
அமிழ்தைப் பருக அமரும் அரியும்,
தமிழ்தான் சுவைஎனத் தாவும்!

பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

Web site names /Web site addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden ……. ..
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m சொல்வது...

எதுவோ ஆதாரம்? தமிழே!

வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்
கல்விமுனை மீது காயம் சுழலநீ
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்!

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர் வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு - மயிலே!
எயிரைக்காண் பல்போல் இசைக்கும் தமிழ்தான்
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!

அவளின் முகமா? அசையும் இதழா?
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா?
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா?
எதுவாம் எழிலோ? தமிழே!
உயிரும், உடலும், உணர்வும், உறவும்,
வயிற்றை நிரவும் வயலும், பயிரும்,
இயலும், நடிப்பும், இசையும், எமக்கோ...
தயங்காது தீண்டும் தமிழே!

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்;
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காண்எட்டு திசைசென்றென் கவிதை சுழலும்; (நான்)
தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்!

Web site names /Web site addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Stories Garden ……. ..
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m சொல்வது...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!

முன்னுரை:

தமிழில் பலரும் அறிந்திருக்கின்ற ஒரு பழமொழி 'மானம் போயிற்று பிராணன் போயிற்று'. இதனுடைய மெய்யான அர்த்தம், மதஆதிக்கக் களத்தினின்று பேதம் ஒதுவோர்களால் உயிராக (உயர்வாகவும்) எண்ணப்படுகின்ற வர்ணாசிரமம் (சாதிகளின் ஆளுமை), மக்கள் நாத்திகர்களாக மாறினால் ஒழிந்துவிடும்". அதாவது, இந்துமதம் அழிந்துற்றதென்றால் உடன்நிகழ்வாக பிராமணியம் எனப்படும் கற்பனை மானுடம் (வேடம்), களைவுப்பட்டு இல்லாது மறையும். இவற்றை, பின்வருமாறு உள்ள 'மானம்' என்னும் தமிழ் வார்த்தைக்கான சொல், பொருள், ஆய்வுரைகைள் மூலமாக விளங்கிக் கொள்ளபட முடியும்.

2) தமிழ்மொழியுள் நடைமுறையில் இருந்திடும் ஒன்று மற்றும் இரண்டெழுத்துக் களில் முற்றுப்பெறாத ஆனால் நிகழ்வுகளை ஆதாரங்களாக வெளிப்படுத்தும் வார்த்தைகளை தேர்வுசெய்து தனித்தனிச் சொல்லாக நுணுகி ஆய்வுச் செய்து முறையே, அவற்றின் மெய்யான அர்த்தங்களை கண்டறிய முற்படுகையில், தமிழ் சமுதாயத்தின் பல உண்மையான சரித்திரத் தொடர்களை, பழக்கவழக்கங்களை மற்றும் பயன்படுத்திய உடமைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும்.; தமிழில் பேசப்படுகிற அநேகமாக எல்லாச் சொற்களுக்குமே அவை அவசியமான எழுத்துக்களுடன் முழுமை பெற்றிருக்காத போதும், மூலஅர்த்தங்களை அறியப்படும் படிக்கு, தலை முதன்மை) எழுத்துக்களாக, மற்றும் தாய்ச் சொற்களாக, உரிய சொல் ஆட்சிகளுடன் [உ-ம். வா போ நீ கா மா சா(வு) நில் தேய் தண் உண் - என்று இப்படி] ஏராளமாக உண்டு.

3) அந்தப்படிக்கு, ஈ இனம் என்பது, 'இனம்' ஆயிற்று. மா இனம் என்பது, 'மானம்' ஆயிற்று.; 'மா இனம்' இழந்தவன் என்பது, காலப்போக்கில் 'மானம் இழந்தவன்' என்றோர் புதிய அர்தத்தில், தவறான புரிதலாயிற்று.; மானுடம், மதம் வகுப்பு சாதி என்பதாக, என்று பிரிவுற்றனவோ அன்று மா இனம் என்பதானது மறைவுற்று, மோதல் கரு உற்றது.; மோதல் பின்னாளில் மோதம் என்றோ மாதம் எனறோ மாறிட்டதாக கணிக்க தலைச் சொற்கள் இல்லை;; என்றாலும் பேதங்கள் மற்றும் மோதல்கள் செய்திடுவதற்காகவும் மதம் எனும்படிக்கு நிலைமை உள்ளதால் மதம் (வெறி) ஆயிற்று.

4) இந்தப்படிக்கு, 'ஈ இனம்' என்பது குறைந்த எண்ணிக்கையிலான இனம் என்பதாகவும் அந்தப்படிக்கு மா இனம், பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாகவும் அமைந்துற்றன. அதனடிப்படையில் ஈ இனம், மா இனம், உள்ளதோ? என்கின்ற கேள்வி துளிர்த்திட்டது. அது காலப்போக்கில் "மானம் ஈனம் உள்ளதோ" என்ற வரிவடிவத்தில் பொருள்மாற்றம் பெற்று, தமிழர்கள் ஒருவரையொருவர் சாடுவதற்காகப் பயன்பட்டது. ஒன்றுபட்டு வாழ்ந்திட்ட நாகரிக மனித குணத்தை முற்றுமாகப் புரட்டிப்போட்டது. சூழல் அடிப்படையில் தமிழுள் ஏற்பட்ட மொழிச் சிதைவுகளால் தமிழன் திராவிடர்கள் என்று அய்ந்து கூறுகளாகின்றான். திராவிடருள் தீராத எல்லைத் தொல்லைகள், நதிநீர் சச்சரவுகள், சாதி மற்றும் மதங்கள் அடிப்படையில், பேத மோதல்கள் என்று சண்டைகள் கரு ஆக, மா இனம் போர் இனம் ஆயிற்று.

5) தமிழரின் மேற்படி மா இனமான பேரினம் [பெரிய இனம்], பிளவுண்டு மோதல் இனமாக மாறிட, போர் இனம் என்று பிரிய நேர்ந்தது.; போர் இனம் மோதல்களைச் செய்து பேர் இனம் [அதாவது பெயர் பெற்ற இனம்] என்று ஆயிற்று.; பேர் இனம் என்பது போர்களில் வென்றதால் வந்துற்றது என்கின்ற உண்மையானது காலப் போக்கில் மறைந்து, பெரிய இனம் ஆயிற்று. அந்தப்படிக்கு, 'இன மா யினம் காக்க...' என்று அவ்வப்போது தமிழ் பேசப்படுகிறவர்களால் போர்முழக்கமே போல் ஆர்ப்பரிக்கப் படுகிறது. தமிழர்கள் திராவிடர்களாக பிளவுண்ட பின்னர், அந்த இனத்தின் தமிழ் மா இனம் காக்க... என்ற பொருளடிப்படையில் 'தமிழ் அல்லது தமிழர் மானம் காக்க...' என்பதானது, போர் முழக்கமாய் நெருக்கடி ஏற்படுகிற போதெல்லாம் அதிர்ந்து, ஆனால் சாதிக் கூறுகளால் பேதப்பட்டு வகுப்பு அடிப்படையில் எதையும் முடிவுசெய்திடும் நிர்பந்தஙகளால் மெலிந்து, இனம் மட்டும் அல்ல தமிழர் என்ற அடிப்படை அர்த்தமும் பலப்படாததால் கோரிக்கைகட்கு அடிப்படை இருந்தாலும், மேற்படி முழக்கங்களானது அவ்வப்போது பிசுபிசுக்கின்றது.

Continues at Page-2

willswords m சொல்வது...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!
[Page-2]

6) மேலே பத்தி (2)ல் உள்ளபடி மா இனம் என்பதிலிருந்து மானம் என்பதானது துளிர்ந்திட்டது என்பதால் அதனடிப்படையில் அவமானம் என்பதும் கிளைவிட்டது. அவளுடைய அல்லது அவனுடைய என்பதானது 'அவ...' என்கின்ற ஈரெழுத்துக்களில் குறைச்சொல்லாக சுருங்கி... ஆக 'அவ...' என்ற அவ்ஈரெழுத்துச் சொல்லுடன் மா+இனம் என்கின்ற இரு கூட்டுச் சொற்கள் இணைய, அது 'அவ+மா+இனம்' என்றாயிற்று.; அதனடிப்படையில் அவமானம் என்பதற்கு [சாதி விலகி ஒருவர் காதல் மணம் புரிகிற போது அவர் சார்ந்த சாதி மா இனமாக இதுவரை இயங்கியது, இப்போது], அவளுடைய அல்லது அவனுடைய சாதி மா+இனம் ஆக, ஆயிற்று என்று புரிதலாகின்றது; அதனால், 'மானம் போயிற்று' என்பது மா+இனம் நிலைப்புரண்டு விலகிட்டது என்று பொருளாகின்றது.

7) இப்படியே, பா இனம் என்பதும் பா இனர் என்றாகி, பாணர் என்றும், அவர்கள் புலவர்களாக (உ-ம். இராமாண ஆசிரியர் வால்மீகி) மற்றும் புரவலர்களாகவும் (உ-ம். கடை எழுவள்ளல்கள், குறிப்பாக பாரிவள்ளல், அம்மன்னனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் பிறப்புவழி முன்னோர்களும் அரசபரம்பரையினரும்) மானுடத்துள் தமிழ் புலமையில் உயர்ந்து சிறந்திருந்திட்ட காரணத்தால் மேலும், அன்றைய நிலையில் அவர்கள் இயற்கைச் சூழலால் மலைகள் மற்றும் பாறைகள் மீதும் [மேட்டுக் குடிகளாக] வாழ்ந்தவர்கள் என்பதால் பாறை அய்யர் என்றும் அரசர்களாக இருந்து முன்னோர்களின் செயல் (பாக்கள்) நிலைகளில் நீதி உரைத்திட்ட காரணங்களால் பா+உரையர் என்றும், பா உரை அய்யர் என்றும், இந்தியாவின் இருண்ட கால தெடக்க நாள் முடியவும் போற்றப்பட்டனர் என்பதும்,; தமிழர் வரலாற்றை இருண்ட காலத்துக்கு அப்பால், கடை எழு வள்ளல்கள் மற்றும் இராமாயண காவிய ஆசிரியர் ஆதிப் பா உரை அய்யர் வால்மீகி முதலானோர் வாழ்ந்திட்ட காலங்கட்குச் சென்று நிகழ்வுகளை முறையே ஆய்வுச் செய்கையில் தெளிவுப்படும்.

8) மானம் போயிற்று... பிராணன் போயிற்று [முன்னுரைத் தொடர்ச்சி]:

மானம் என்பதற்கு சுயமதிப்பு, கற்பு, பெருமை, வலிமை, கணிப்பு, அளவை, அன்பு, பற்று, இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், சுந்தரி, வானம் ஆகியன தற்கால தமிழ் அகராதிகள்படிக்கு அர்த்தங்களாக திணிக்கப்பட்டுள்ளன. அதனால் 'இனமானம் போயிற்று' என்பதற்கு, இன சுயமதிப்பு, இன கற்பு (உடலுறவு ஒழுக்கம்), இனப் பெருமை, இன வலிமை, இன கணிப்பு, இன அளவை(அளவு) , இன சுந்தரி [ஆகியன] போயிற்று என்றபடி, பொருள்கள் தரப்பட ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு; ஆனால் மானம் என்பதற்கு, விளக்கங்களாக தமிழ் அகராதிகளில் நடைமுறையில் இருந்திடும் ஏனைய இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், வானம் அகிய சொற்களை இந்த ஆய்வுரையில் இதுவரை விவரித்திடவாறு தகவல்கள்படிக்கு, அர்த்தங்களாக எடுத்துக்கொள்ளப்பட தாய்ச் சொல் (சொல்வழி ஆதாரங்கள்) இல்லை.

9) இந்நிலைமையால் மேலே, முன்னுரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டபடி, 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' என்பதாக உள்ள பழமொழிக்கு, "மா இனமாக கருதிடும் இந்துக்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் சூத்திரர்கள்தான் எனும்படிக்கு இன்றளவும் வழக்கில் இருந்திடும்நிலைமையும்; மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்பனியத்தின் ஒட்டுமொத்த அடிமைகள்தாம் என்கின்ற சுதந்திரமற்ற நிர்பந்தமும் [கடவுள் உண்டு என்பதாக நம்பிக்கையைத் திணித்து அடிமைகளாக நடத்தப்படும் சதிச் சூட்சமங்கள்] எப்போது இல்லாதபடி நிலமை மாறுமோ, அப்போது உடன் நிகழ்வாக பிராணன் (பிராமினன் என்கின்ற மானுடம்) போயிற்று" என்கின்ற அடிப்படையில்தான் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, வேறு எந்த வகையிலும் அர்த்தம் தரப்படுமானால் மேற்படி இகழ்ச்சி, வெட்கம் முதலான அர்த்தங்களாக தமிழ் அகராதிகளில் தரப்பட்ட சொற்கள் யாவும் போன்றே 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' சொற்றொடரும், பொய்பூசிய கற்பனையே என்றாகிடும்.

Continues at Page-3.

- Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in

willswords m சொல்வது...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!

[Page-3]

முடிவுரை:

10) அகராதிகளில் பேதங்களை வலுப்படுத்தும் புராணகால அர்த்தங்களை (கற்பனைகளை) விலகி தாய்ச்சொற்களை ஆய்வுச் செய்திடுகையில் மறைவுப்பட்ட பல சரித்திர நிகழ்வுகள் வெளிப்படக்கூடும் என்பதோடு,; எவையெல்லாம் தமிழ்மொழியின் மூல பேச்சுவழக்கு ஆதாரஒலிகள் என்பதும், மேலும் அவ்வொலிகளில் எவை தமிழ் எதிரிகளால் அகற்பட்டுள்ளன என்பதும், என்பதும் அறியப்படும். [உ-ம்], காகம் என்பதின் நடுவில் வருகின்ற 'க" (ha); கவசம் என்பதில் வருகின்ற (ஸ); கம்பம் என்பதில் உள்ள ப (ba); இடம் என்பதில் காணுகிற, 'ட' (dஅ) என்று இப்படியாக... பல ஒலிகள் அல்லது ஓசைகள் இவ்வொலிகளுக்கு வரிவடிவங்கள் தனித்தனியே ஆதியில் தமிழர்களின் மற்றும் தமிழ்முன்னோர்களின் மொழிப்புலக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் மேற்படி ஒலிகட்கான வரிவடிவங்கள் அவை மதபேதமுரடர்களால் நாளந்தா பல்கலைக் கழகம் தீக்கிரையாக்கப்பட்டதாலோ அல்லது அந்நிகழ்வுக்கு முன்பாக ஏற்பட்டதாக அறியப்படுகின்ற இயற்கையின் ஆழிப் பெருவெள்ளங்களின் சீற்றங்களாலோ அந்தப் படிக்கு வந்துற்ற இக்கட்டான காலங்களில் தமிழ்வளர்ச்சித் தொடர்பான ஓலைச் சுவடி களைக் களவாடியவர்களின் நேர்மையற்ற நடைமுறைகளாலோ அழிந்திருக்கக்கலாம்.

Web sites' names /addresses :
1)Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in
2)Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3)Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in
4)Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5)Willswords Stories Garden ……. ..
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m சொல்வது...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்! [Page-2]

6) மேலே பத்தி (2)ல் உள்ளபடி மா இனம் என்பதிலிருந்து மானம் என்பதானது துளிர்ந்திட்டது என்பதால் அதனடிப்படையில் அவமானம் என்பதும் கிளைவிட்டது. அவளுடைய அல்லது அவனுடைய என்பதானது 'அவ...' என்கின்ற ஈரெழுத்துக்களில் குறைச்சொல்லாக சுருங்கி... ஆக 'அவ...' என்ற அவ்ஈரெழுத்துச் சொல்லுடன் மா+இனம் என்கின்ற இரு கூட்டுச் சொற்கள் இணைய, அது 'அவ+மா+இனம்' என்றாயிற்று.; அதனடிப்படையில் அவமானம் என்பதற்கு [சாதி விலகி ஒருவர் காதல் மணம் புரிகிற போது அவர் சார்ந்த சாதி மா இனமாக இதுவரை இயங்கியது, இப்போது], அவளுடைய அல்லது அவனுடைய சாதி மா+இனம் ஆக, ஆயிற்று என்று புரிதலாகின்றது; அதனால், 'மானம் போயிற்று' என்பது மா+இனம் நிலைப்புரண்டு விலகிட்டது என்று பொருளாகின்றது.

7) இப்படியே, பா இனம் என்பதும் பா இனர் என்றாகி, பாணர் என்றும், அவர்கள் புலவர்களாக (உ-ம். இராமாண ஆசிரியர் வால்மீகி) மற்றும் புரவலர்களாகவும் (உ-ம். கடை எழுவள்ளல்கள், குறிப்பாக பாரிவள்ளல், அம்மன்னனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் பிறப்புவழி முன்னோர்களும் அரசபரம்பரையினரும்) மானுடத்துள் தமிழ் புலமையில் உயர்ந்து சிறந்திருந்திட்ட காரணத்தால் மேலும், அன்றைய நிலையில் அவர்கள் இயற்கைச் சூழலால் மலைகள் மற்றும் பாறைகள் மீதும் [மேட்டுக் குடிகளாக] வாழ்ந்தவர்கள் என்பதால் பாறை அய்யர் என்றும் அரசர்களாக இருந்து முன்னோர்களின் செயல் (பாக்கள்) நிலைகளில் நீதி உரைத்திட்ட காரணங்களால் பா+உரையர் என்றும், பா உரை அய்யர் என்றும், இந்தியாவின் இருண்ட கால தெடக்க நாள் முடியவும் போற்றப்பட்டனர் என்பதும்,; தமிழர் வரலாற்றை இருண்ட காலத்துக்கு அப்பால், கடை எழு வள்ளல்கள் மற்றும் இராமாயண காவிய ஆசிரியர் ஆதிப் பா உரை அய்யர் வால்மீகி முதலானோர் வாழ்ந்திட்ட காலங்கட்குச் சென்று நிகழ்வுகளை முறையே ஆய்வுச் செய்கையில் தெளிவுப்படும்.

[Continued in Page-3]

Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in

willswords m சொல்வது...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்! [Page-3]

8) மானம் போயிற்று... பிராணன் போயிற்று [முன்னுரைத் தொடர்ச்சி]:

மானம் என்பதற்கு சுயமதிப்பு, கற்பு, பெருமை, வலிமை, கணிப்பு, அளவை, அன்பு, பற்று, இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், சுந்தரி, வானம் ஆகியன தற்கால தமிழ் அகராதிகள்படிக்கு அர்த்தங்களாக திணிக்கப்பட்டுள்ளன. அதனால் 'இனமானம் போயிற்று' என்பதற்கு, இன சுயமதிப்பு, இன கற்பு (உடலுறவு ஒழுக்கம்), இனப் பெருமை, இன வலிமை, இன கணிப்பு, இன அளவை(அளவு) , இன சுந்தரி [ஆகியன] போயிற்று என்றபடி, பொருள்கள் தரப்பட ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு; ஆனால் மானம் என்பதற்கு, விளக்கங்களாக தமிழ் அகராதிகளில் நடைமுறையில் இருந்திடும் ஏனைய இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், வானம் அகிய சொற்களை இந்த ஆய்வுரையில் இதுவரை விவரித்திடவாறு தகவல்கள்படிக்கு, அர்த்தங்களாக எடுத்துக்கொள்ளப்பட தாய்ச் சொல் (சொல்வழி ஆதாரங்கள்) இல்லை.

9) இந்நிலைமையால் மேலே, முன்னுரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டபடி, 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' என்பதாக உள்ள பழமொழிக்கு, "மா இனமாக கருதிடும் இந்துக்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் சூத்திரர்கள்தான் எனும்படிக்கு இன்றளவும் வழக்கில் இருந்திடும்நிலைமையும்; மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்பனியத்தின் ஒட்டுமொத்த அடிமைகள்தாம் என்கின்ற சுதந்திரமற்ற நிர்பந்தமும் [கடவுள் உண்டு என்பதாக நம்பிக்கையைத் திணித்து அடிமைகளாக நடத்தப்படும் சதிச் சூட்சமங்கள்] எப்போது இல்லாதபடி நிலமை மாறுமோ, அப்போது உடன் நிகழ்வாக பிராணன் (பிராமினன் என்கின்ற மானுடம்) போயிற்று" என்கின்ற அடிப்படையில்தான் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, வேறு எந்த வகையிலும் அர்த்தம் தரப்படுமானால் மேற்படி இகழ்ச்சி, வெட்கம் முதலான அர்த்தங்களாக தமிழ் அகராதிகளில் தரப்பட்ட சொற்கள் யாவும் போன்றே 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' சொற்றொடரும், பொய்பூசிய கற்பனையே என்றாகிடும்.

முடிவுரை:

10) அகராதிகளில் பேதங்களை வலுப்படுத்தும் புராணகால அர்த்தங்களை (கற்பனைகளை) விலகி தாய்ச்சொற்களை ஆய்வுச் செய்திடுகையில் மறைவுப்பட்ட பல சரித்திர நிகழ்வுகள் வெளிப்படக்கூடும் என்பதோடு,; எவையெல்லாம் தமிழ்மொழியின் மூல பேச்சுவழக்கு ஆதாரஒலிகள் என்பதும், மேலும் அவ்வொலிகளில் எவை தமிழ் எதிரிகளால் அகற்பட்டுள்ளன என்பதும், என்பதும் அறியப்படும். [உ-ம்], காகம் என்பதின் நடுவில் வருகின்ற 'க" (ha); கவசம் என்பதில் வருகின்ற (ஸ); கம்பம் என்பதில் உள்ள ப (ba); இடம் என்பதில் காணுகிற, 'ட' (dஅ) என்று இப்படியாக... பல ஒலிகள் அல்லது ஓசைகள் இவ்வொலிகளுக்கு வரிவடிவங்கள் தனித்தனியே ஆதியில் தமிழர்களின் மற்றும் தமிழ்முன்னோர்களின் மொழிப்புலக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் மேற்படி ஒலிகட்கான வரிவடிவங்கள் அவை மதபேதமுரடர்களால் நாளந்தா பல்கலைக் கழகம் தீக்கிரையாக்கப்பட்டதாலோ அல்லது அந்நிகழ்வுக்கு முன்பாக ஏற்பட்டதாக அறியப்படுகின்ற இயற்கையின் ஆழிப் பெருவெள்ளங்களின் சீற்றங்களாலோ அந்தப் படிக்கு வந்துற்ற இக்கட்டான காலங்களில் தமிழ்வளர்ச்சித் தொடர்பான ஓலைச் சுவடி களைக் களவாடியவர்களின் நேர்மையற்ற நடைமுறைகளாலோ அழிந்திருக்கக்கலாம்.

Web site names /Web site addresses :
1)Wills in Kavithai Chittu http://willsindiaswillswords.blogspot.in
2)Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3)Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in
4)Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5)Willswords Stories Garden ……. ..
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m சொல்வது...

நாடகம் என்பது, நாடு அடித்துகொண்டிருந்தால்...

தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை அலுவலர்களின் உதயம் கலைமன்றம் சார்பில் மயிலை ராஜேஸ்வரி பாடசாலையில் 26.1.1990-அன்று, நடந்துற்ற ஊஞ்சலாடும் நெஞ்சங்கள் நாடகம் துவக்க விழாவில் மன்றத்தினரை வாழ்த்தி கவிதைச் சிட்டு இதழ் ஆசிரியர் நிகழ்திட்ட அவரது உரையிலிருந்து....
நாடகம் என்பது....

தமிழில் பெரும்பாலான சொற்களுக்கு தலைச்சொற்கள் உள்ளன;; தலைச் சொற்கள் என்றால் தாய்ச் சொற்கள். நாடகம் என்பதற்கும் இரண்டு தாய்ச் சொற்கள் உண்டு. அவை முறையே முதலாவது, 'நாடு' மற்றொன்று 'அகம்'.

'நாடு' என்பது நாட்டைக் குறிக்கும்: அகம் என்றால், வீடு, உள்ளம், உள்மனம் - ஆகிய இம்மூன்றையும் சுட்டும்.

நாடு என்பதும், அகத்தின் பொருள்களாக உள்ள வீடு, உள்ளம், உள்மனம் என்ற அம்மூன்றும் ஒன்றுச் சேர்ந்து நாடகம் ஆயிற்று.

ஆக, நாடகம் என்பது நாடு அடிமைப் பற்றிக் கிடந்தால் விடுதலைப் பற்றியும், அடித்துகொண்டிருந்தால் ஒற்றுமைப் பற்றியும்; சுருக்கமாகச் சொன்னால் நாட்டைப் பற்றி நாட்டு நலன்களைப் பற்றி எடுத்துரைப்பதாக அமைதல் வேண்டும்;

நாடகம் என்பது, சம்பந்தப்பட்டவர்களின் வீடு அதாவது குடும்பத்துக்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டித் தருவதாகவும் ஒவ்வொருவரது உடல் நலம் பேணுவதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நல்ல பல கருத்துக்களை மக்களுக்கு விளக்குவதாக அமைதல் வேண்டும்.

இறுதியாக நாடகம் என்பது உள்மனத்திலிருந்து வெளிப்படும் ஞானத்தை அதாவது மெய்யறிவை மறைக்காது, எடுத்துரைத்து நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வளப்படுத்துவதற்காக அந்தப்படிக்கு நாட்டைச் செம்மைப் படுத்துவதாக அமைதல் வேண்டும்.